Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
மதியம் லன்ச் பாக்ஸிற்கு மீல் மேக்கர் வெச்சு 10 நிமிடத்தில் இப்படியொரு ரைஸ் செஞ்சு கொடுங்க..
Lunchbox Recipe In Tamil: உங்கள் பிள்ளைக்கு மதியம் லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? லன்ச் பாக்ஸிற்கு எப்போதும் ஒரே மாதிரி செய்து கொடுப்பதால், உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடாமல் கொடுத்து அனுப்பும் சாதத்தை அப்படியே திருப்பி கொண்டு வருகிறார்களா?
அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் பிள்ளைக்கு மீல் மேக்கர் பிடிக்குமானால், அதைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு சாதத்தை செய்து கொடுங்கள். இந்த சாதம் செய்ய வெறும் 10 நிமிடங்கள் தான் ஆகும். முக்கியமாக செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் சாதம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மீல் மேக்கர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வடித்த சாதம்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து,
அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்து பிழிந்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து, நன்கு
2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியைத் தூவி வடித்த சாதத்தை சேர்த்து நன்கு
கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
