Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
லன்ச் பாக்ஸ் ரெசிபி: ருசியான.. கேரட் எலுமிச்சை சாதத்தை செய்வது எப்படி?
Carrot Lemon Rice Recipe In Tamil: காலையில் பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு சத்தான அதே சமயம் சுவையான ஒரு சமையலை செய்து கொடுக்க வேண்டுமா? இதுவரை நீங்கள் எலுமிச்சை சாதம் செய்திருப்பீர்கள்.
ஆனால் அந்த எலுமிச்சை சாதத்துடன் கேரட்டை துருவிப் போட்டு கேரட் எலுமிச்சை சாதத்தை செய்துள்ளீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை இதை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் எலுமிச்சை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை கழுவி குக்கரில் போட்டு, அதில் 1 கப்
நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு மற்றும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி,
குக்கரை மூடி 2விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும்
குக்கரைத் திறந்து, சாதத்தை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி,
வேர்க்கடலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின்
உப்பு, மஞ்சள் தூள் நன்கு கிளறி, இறக்கி எலுமிசை சாற்றினை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வதக்கிய பொருட்களை சாதத்துடன் சேர்த்து நன்கு ஒருசேர
கிளறிவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரட் எலுமிச்சை
சாதம் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications