Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க...
Leftover Rice Fritters In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஏதாவது மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் உள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு, மாலை வேளையில் நல்ல மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை செய்து கொடுங்கள். அது தான் ரைஸ் ப்ரிட்டர்ஸ்.
இந்த ரைஸ் ப்ரிட்டர்ஸை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது கூட செய்யலாம். இதனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். அதுவும் தற்போது திடீரென்று மழை பெய்கிறது. அப்போது நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும்.

அப்போது ரைஸ் ப்ரிட்டர்ஸ் போன்ற ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், கடைகளில் நிறைய பணம் செலவழித்து ஸ்நாக்ஸ் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. முக்கியமாக இந்த ரைஸ் ப்ரிட்டர்ஸை சமைக்கத் தெரியாதவர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் இது செய்வதற்கு சுலபமாகவும், ருசியாகவும் இருக்கும்.
உங்களுக்கு மீந்து போன ரைஸ் கொண்டு ப்ரிட்டர்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன ரைஸ் ப்ரிட்டர்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* அரிசி மாவு - 1/4 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மீந்து போன சாதத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி, அரிசி மாவு சேர்த்து,
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்தத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பேக்கிங் சோடா மற்றும்
1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து, எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் வைத்து,
பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான ரைஸ் பிரிட்டர்ஸ்
தயார்.



Click it and Unblock the Notifications