Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
லீவு நாளில் மட்டன் வாங்குனா.. இந்த கிரேவியை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Labori Mutton Gravy Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கப் போகிறீர்களா? ஆனால் அந்த மட்டனை எப்போதும் போல ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் லபோரி மட்டன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த மட்டன் கிரேவி வித்தியாசமான ருசியுடன் இருப்பதோடு, அனைத்துவிதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, நெய் சாதம், புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இந்த சுவையில் மட்டனை சமைத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு லபோரி மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லபோரி மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கெட்டி தயிர் - 50 மிலி
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 50 மிலி
* மிளகு - 15
* சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 7
* ஏலக்காய் - 5
* பட்டை - 2 துண்டு
* வெங்காயம் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 25 மிலி
* வரமிளகாய் - 5
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மட்டனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும்
கெட்டி தயிரை சேர்த்து கைகளால் நன்கு 2 நிமிடம் பிரட்டி விட
வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 50 மிலி எண்ணெய் ஊற்றி
சூடானதும், மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 25 மிலி எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, அத்துடன்
சீரகத் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு
கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில்
வைத்து, 15-20 நிமிடம் மட்டனை வேக வைக்க வேண்டும்.
* மட்டன் நன்கு வெந்துவிட்டால், மூடியைத் திறந்து, சிறிது
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான லபோரி மட்டன் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











