Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
லால் பன்னீர்
பன்னீரைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை வீட்டில் செய்யலாம். பொதுவாக பன்னீர் சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதில் ஒரு ரெசிபி தான் லால் பன்னீர்.
பன்னீர் மிகவும் பிரபலமான உணவுப் பொருள் மற்றும் பலருக்கும் இது விருப்பமான உணவுப் பொருள் என்றும் சொல்லலாம். பன்னீரைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை வீட்டில் செய்யலாம். பொதுவாக பன்னீர் சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதில் ஒரு ரெசிபி தான் லால் பன்னீர். லால் என்றால் சிவப்பு. லால் பன்னீர் என்பது சிவப்பு நிற பன்னீர் ரெசிபி. இது காஷ்மீரி மிளகாய் மற்றும் தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு காரமான மற்றும் சற்று புளிப்பான ரெசிபி.

உங்களுக்கு லால் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லால் பன்னீரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பெரியது மற்றும் அரைத்துக் கொள்ளவும்)
* இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பன்னீரை எடுத்து, சோள மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காஷ்மீரி மிளகாயை தூளை நீர் சேர்த்து ஓரளவு விழுதாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
* பின் இஞ்சி விழுதை சேர்த்து கிளறி, அரைத்த தக்காளியை ஊற்றி பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், லால் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பன்னீரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.
* கரம் மசாலா பவுடரை சேர்ப்பது, நல்ல ப்ளேவரைத் தரும்.
* வேண்டுமானால் இஞ்சி விழுதிற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள் தக்காளியை சேர்ப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications