Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு இந்த கும்பகோணம் ஸ்டைல் கடப்பா செஞ்சு பாருங்க... எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது...!
Kumbakonam Kadappa Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசைதான். இட்லி, தோசைக்கு எவ்வளவு சைடிஷ் கண்டுபிடித்தாலும் பத்தாது. எத்தனை வகை சட்னிகள் அரைத்தாலும் மீண்டும் மீணடும் புதிய வகை சட்னி அல்லது சாம்பார் வகைகளின் தேவைகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு சிறப்பு உணவு இருக்கும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் பரிமாறப்படும் ஒரு வகை குழம்புதான் கடப்பா. குருமா சுவையில் இருக்கும் இந்த சைடிஷ் இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் சாப்பிட்டு போரடித்தவர்கள் இந்த கடப்பாவை தாராளமாக முயற்சிக்கலாம். இந்த பதிவில் சூப்பரான கும்பகோணம் கடப்பாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பாசிப்பருப்பு - கால் கப்
- பொட்டுக்கடலை - கால் கப்
- பச்சை பட்டாணி - கால் கப்
- பட்டை - 2
- கிராம்பு - 2
- ஏலக்காய் - ஒன்று அல்லது 2
- கசகசா - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - 2 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- மராத்தி மொக்கு - 2
- பூண்டு - 3
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் - அரை மூடி
- பெரிய வெங்காயம் - 3
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - 3
- தக்காளி - 3
- புளி - எலுமிச்சம்பழ அளவு
- கொத்தமல்லித் தழை - சிறிது
- பச்சை மிளகாய் - 8
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பூண்டைத் தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பு, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- பொட்டுக்கடலையுடன் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பாதி அளவு பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- புளியை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கசகசா, மராத்தி மொக்கு ஆகியவற்றைப் போட்டுப் பொரிக்கவும்
- மசாலாப் பொருட்கள் பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் புளிக் கரைசல் ஊற்றி, நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள பூண்டை சேர்க்கவும்.
- அத்துடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலைக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.
- கொதிக்கும் போதே வேக வைத்த பச்சை பட்டாணி, பாசி பருப்பு மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- நன்றாக கொதித்த பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து, சிறிது நேரம் கழித்து இறக்கி, கொத்தமல்லித் தழை தூவினால், இட்லி, தோசைக்குப் சூப்பராக இருக்கும் கும்பகோணம் கடப்பா தயார்.



Click it and Unblock the Notifications
