Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Krishna Jayanthi Special Aval Laddu Recipe In Tamil: கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. அனைவரும் வீட்டில் கிருஷ்ணருக்கு இந்த வருடம் என்ன இனிப்புக்களை செய்து படைத்து வழிபடுவது என்று யோசிக்கத் தொடங்கியிருப்போம். கிருஷ்ணருக்கு பால் பொருட்களால் ஆன பலக்காரங்கள் என்றாலும் ரொம்ப பிடிக்கும்.
எனவே வெண்ணெய், நெய், பால் போன்றவற்றைக் கொண்டு பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபடுவது நல்லது. முக்கியமாக கிருஷ்ணருக்கு லட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே லட்டு செய்து கிருஷ்ணருக்கு படைக்கலாம். லட்டுவில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அவல் லட்டு. இந்த அவல் லட்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக அவல் லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* நெய் - 2 டீஸ்பூன் + 1/2 கப்
* முந்திரி - தேவையான அளவு
* சர்க்கரை - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் அவலை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து அதை சிறிது நேரம்
வறுத்து , அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக ப்ரை செய்து, அதை ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த அவலை சேர்த்து, முதலில் நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை மற்றும் 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த அவல் பொட்டுக்கடலையை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 1/2 கப் நெய்யை லேசாக சூடேற்றி, பின் அதை அவலுடன் சேர்த்து
கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் ப்ரை செய்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று
உருட்டிக் கொண்டால், சுவையான அவல் லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
