Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கேரட் ஜவ்வரிசி பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாருங்க..
Krishna Jayanthi Special Carrot Javvarisi Payasam: நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து, கிருஷ்ணருக்கு படைத்து வழிபடுவது வழக்கம். கிருஷ்ணருக்கு பாயாசம், சீடை, லட்டு மற்றும் பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய அனைத்து பலகாரங்களும் பிடிக்கும்.
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்கள் ஒரு வித்தியாசமான பாயாசத்தை செய்து கிருஷ்ணருக்கு படைக்க விரும்பினால், கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் நல்ல வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 20
* உலர் திராட்சை - 20
* கேரட் - 1 (துருவியது)
* காய்ச்சாத பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 2 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாவு ஜவ்வரிசியை எடுத்து, நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத 3/4 லிட்டர் பாலை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை
சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்த பின், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி,
ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications