Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் லட்டு ரெசிபி... இதை செஞ்சு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுங்க... சூப்பரா இருக்கும்!
Krishna Jayanthi Special Butter Laddu Recipe in Tamil: இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டது. கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே வீட்டில் மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக் கொள்ளும். வீட்டை அலங்கரிப்பது, குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம் போடுவது, இனிப்புகள் செய்வது, பூஜை, சடங்குகள் என வீடே கலகலப்பாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் இனிப்புகள் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஏனெனில் கிருஷ்ணர் ஒரு உணவுப்பிரியர்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்கு வழக்கமான இனிப்புகளை வைத்து வழிபடாமல் கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடும் போது அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். கிருஷ்ணருக்கு பிடித்த பொருள் என்று வரும்போது முதலிடத்தில் இருப்பது வெண்ணெய்தான். எனவே நீங்கள் செய்யும் இனிப்புகளில் வெண்ணெயை சேர்த்து செய்வது நல்லது.

இந்த பதிவில் வெண்ணெயை வைத்து சுவையான மற்றும் லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இந்த வெண்ணெய் லட்டு செய்ய குறைவான பொருட்களே போதும் மற்றும் இதனை சில நிமிடங்களில் செய்து விடலாம். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் லட்டை செய்து கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெண்ணெய் - 1 கப்
- மைதா மாவு - 2 கப்
- சர்க்கரை - 1.5 கப்
- பால் - 1/2 கப்
- ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- முந்திரி - 10 (உடைத்தது)
செய்முறை:
- முதலில் மைதாவை எந்த தூசியும் இல்லாமல் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பாலை முன்கூட்டியே கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடிகனமான கடாயில் வெண்ணெயை உருக்கி, முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே கடாயில் சலித்து வைத்த மைதா மாவு சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். மாவு நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
- மாவு வறுபட்டதும், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை கூட சேர்க்கலாம்.
- பின்னர் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளவும்.
* இந்த கலவையைச் சூடாக இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, நடுவில் ஒரு முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
- முந்திரிக்கு பதில் பாதாம் வைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- லட்டுகள் ஆறியதும் பூஜையின் போது வைத்து கிருஷ்ணரை மகிழ்ச்சியாகி வழிபடுங்கள்.
- பூஜை முடிந்ததும் காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
- பால் ஊற்றி செய்வதால் இதை விரைவில் சாப்பிட்டு விடுவது நல்லது.



Click it and Unblock the Notifications