Latest Updates
-
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்..
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது!
Krishna Jayanthi 2026 Special Aval Laddu Recipe In Tamil: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. அதுவும் இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி வருகிறது. கிருஷ்ணர் பிறந்த இந்நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம்.

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த லட்டு செய்து படைக்க விரும்பினால், அவல் செய்து செய்யுங்கள். இந்த லட்டு மென்மையாக இருப்பதோடு, வாயில் வைத்ததும் கரையும் படி இருக்கும். அதுமட்டுமன்றி, இதை 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு அவல் லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு..
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* அவல் - 1 கப்
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* வேர்க்கடலை - 3/4 கப்
* ஏலக்காய் - 2
வெல்லக் கரைசலுக்கு...
* பொடித்த வெல்லம் - 1 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்
லட்டு செய்வதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* ட்ரை தேங்காய் பொடியை- 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், அவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில்
போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து லேசாக வறுத்து,
அதையும் அவலுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து
நன்கு வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த அவல், பொட்டுக்கடலையுடன், 2 ஏலக்காயை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டு, அதை மிக்சர் ஜாரில்
சேர்த்து நன்கு அரைத்து, அதையும் அவலுடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் ட்ரை தேங்காய் பொடியை சேர்த்து வறுத்து, அத்துடன் வெல்ல
நீரை வடிகட்டி ஊற்றி கிளறி, அதன் பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து
நன்கு கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், வறுத்த முந்திரியை சேர்த்து
உருண்டைகளாக பிடித்துக் கொண்டால், அவல் லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
