Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கோவக்காயை இப்படி வறுவல் செய்யுங்க.. கிலோ கணக்கில் செஞ்சாலும் உங்களுக்கு கிடைக்காது...
Kovakkai Verkadalai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் கோவக்காய் என்றாலே வேண்டாம் என்பார்களா? ஆனால் உங்களுக்கு கோவக்காய் பிடிக்குமா? வீட்டில் உள்ளவர்களுக்கு கோவக்காய் பிடிக்காது என்பதற்காக அதை வாங்கி சமைப்பதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் கோவக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமாக பெண்களுக்கு கோவக்காய் மிகவும் நல்லது.
உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு தவறாமல் அடிக்கடி இந்த காயை செய்து கொடுங்கள். அதுவும் நீங்கள் செய்யும் ஸ்டைல் உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு கோவக்காயுடன் வேர்க்கடலை சேர்த்து வறுவல் செய்யுங்கள். இந்த வறுவல் நிச்சயம் சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு கோவக்காய் வேர்க்கடலை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவக்காய் வேர்க்கடலை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவக்காய் - 400 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவக்காயை நீரில் கழுவி, அவற்றை மெல்லிய வட்டத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கோவக்காயைப்
போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து, அவ்வப்போது கிளறி விட்டு
10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கோவக்காய் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வேர்க்கடலை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கோவக்காயை சேர்த்து கிளறி, அத்துடன் குழம்பு மிளகாய்
தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து
நன்கு கிளறி 10 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால்,
சுவையான கோவைக்காய் வேர்க்கடலை வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
