Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.. கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி?
கோவைக்காயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். ஆனால் பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருப்பதோடு, அப்படியே ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.
பெரும்பாலானோரின் வீட்டில் மதிய வேளையில் சாதத்திற்கு பொரியல் அவசியம் இருக்கும். சொல்லப்போனால் பொரியல் இல்லாமல் சாதமே இறங்காது. உங்கள் வீட்டிலும் அந்த நிலை தானா? என்ன பொரியல் செய்வது என்று தெரியாமல் தினமும் யோசிப்பீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு பொரியல் செய்யுங்கள். இந்த கோவைக்காய் பொரியலை 10 நிமிடத்தில் ஈஸியாக செய்யலாம்.
முக்கியமாக கோவைக்காய் பொரியலானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். பெண்களுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது. பெண்கள் அடிக்கடி கோவைக்காயை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

கோவைக்காயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். ஆனால் பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருப்பதோடு, அப்படியே ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். அந்த வகையில் கோவைக்காய் பொரியல் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
உங்களுக்கு கோவைக்காய் பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவைக்காய் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கோவைக்காய் நீரில் நன்கு கழுவி, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் நறுக்கிய கோவைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு கையால் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* கோவைக்காயை இப்படியே மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக மாறும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான கோவைக்காய் பொரியல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications