Latest Updates
-
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Kovakkai Masala Sadam Recipe in Tamil: தினமும் மதியம் சாதத்துக்கு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரத்துவிட்டதா? உங்களுக்கு சமையலறையில் நீண்ட நேரம் இருக்க விருப்பமில்லையா? அப்படியானால் ஒருமுறை கோவக்காய் மசாலா சாதத்தை செய்யுங்கள். இந்த கோவக்காய் மசாலா சாதம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். சொல்லப்போனால் இந்த கோவக்காய் சாதம் பிரியாணி சுவையில் இருக்கும்.

கோவக்காய் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் ஒன்றாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் கோவைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம் பெரும்பாலும் கோவக்காயை பொதுவாக பொரியல் மட்டும்தான் செய்வோம். எனவே இதுபோல கோவக்காய் மசாலா சாதத்தை செய்யும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சாதத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
உங்களுக்கு சத்தான கோவக்காய் மசாலா சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவக்காய் மசாலா சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 15 கோவக்காய்
- 1 கப் அரிசி
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 5 வர மிளகாய்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் எள்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
- வேக வைப்பதற்கு முன் அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- அரிசி ஊறியதும் குக்கரில் 1 கப் அரிசிக்கு 1½ கப் தண்ணீர். மிதமான தீயில் வைத்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
- சாதத்தை தட்டுக்கு மாற்றி நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி ஆற விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் மிளகு, எள் மற்றும் மல்லி விதை சேர்த்து வறுக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒவ்வொரு கோவக்காயையும் நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து கிளறி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கோவைக்காயை வேக வைக்கவும்.
- கோவக்காய் பொன்னிறமாகும் வரை வதக்கவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி கோவக்காயை வேகவைக்கவும்.
- கோவக்காய் வெந்ததும் இறுதியில் மசாலாத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- இந்தக் கலவை நன்கு கெட்டியானதும், ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- அவ்வளவுதான் சத்தான மற்றும் சுவையான வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications
