Latest Updates
-
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
காலிஃப்ளவரை கொங்குநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு செமயா இருக்கும்...
Kongunad Cauliflower Kurma Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு கொங்குநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்கள்.
இந்த கொங்குநாடு காலிஃப்ளவர் குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு காலிஃப்ளவர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு காலிஃப்ளவர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 3 கப்
மசாலாவிற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சிறிது
* தக்காளி - 3 (நறுக்கியது)
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் சிறிது
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, காலிஃப்ளவர் பாதியாக வெந்ததும்,
நீரை வடிகட்டிவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பொட்டுக்கடலை, வரமிளகாய் சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு தூவி
மிதமான தீயில் வைத்து 7-8 நிமிடம் வதக்க வேண்டும்.
* வெங்காயத்தின் நிறம் மாறியதும், அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள்
தூள், மல்லித் தூள், தேங்காய், புளி ஆகியவற்றை சேர்த்து 6-7 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து கிளறி, குறைவான தீயில்
2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு காலிஃப்ளவர்
குருமா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications