Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
மழை நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இப்படி கொள்ளு ரசம் செஞ்சு சாப்பிடுங்க...
Kollu Rasam Recipe In Tamil: மழை ஆங்காங்கு தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்வதால் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனையால் அதிகம் அவதிப்படக்கூடும். இதற்கு காரணம் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். இப்படி பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், அவ்வப்போது கொள்ளு ரசம் செய்து சாப்பிடுங்கள்.
இதுவரை நீங்கள் கொள்ளு ரசம் செய்வதற்கு கொள்ளு பருப்பை வேக வைத்து செய்திருந்தால், இனிமேல் அப்படி செய்யாமல், கொள்ளுவை பொடி செய்து ரசம் வையுங்கள். இந்த ரசத்தை அடிக்கடி மழைக்காலத்தில் செய்து சாப்பிட்டால், உடல் வலுவாகவும், அடிக்கடி நோய்வாய்ப்படாமலும் இருக்கலாம்.

உங்களுக்கு கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 50 கிராம்
* தக்காளி - 2
* கொத்தமல்லி தண்டு - சிறிது
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* பெருங்காயத் தூள் - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* ரசப்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை சேர்த்து 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சற்று கொரகொரவென்று பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கொள்ளு பொடியுடன், தக்காளி, கொத்தமல்லி தண்டு சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள்
தூள், அரைத்த கொள்ளு கலவை, சுவைக்கேற்ப உப்பு, பச்சை மிளகாய்,
வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள்,
பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, ரசப்பொடியை சேர்த்து வதக்கி, கலந்து
வைத்துள்ள ரசத்தை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசமானது கொதிக்க தொடங்கும் போது குறைவான தீயில் வைத்து 1 நிமிடம்
கொதிக்க வைத்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
கொள்ளு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications