Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கல்யாண விருந்து ஸ்பெஷல் கேசரி ரெசிபி... இனிமே வீட்டிலேயே செஞ்சு அசத்துங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Kesari Recipe in Tamil: ட்டில் எவ்வளவுதான் நாம் சிறப்பாக சமைத்து சாப்பிட்டாலும் கல்யாண விருந்து என்பது எப்போதுமே அனைவருக்கும் மிகவும் ஸ்பெஷலானதுதான். கல்யாண விருந்தில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. பல புதுப்புது உணவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது ஒருவகையில் நல்லதாக இருந்தாலும் தற்போதைய கல்யாண பந்தி கடந்த காலங்களில் இருந்ததைப் போல கலகலப்பாகவும், சிறப்பாகவும் இல்லை.
இப்போது கல்யாண விருந்தில் பல புதுப்புது இனிப்புகள் பரிமாறப்பட்டாலும், இப்போதும் கல்யாண வீட்டு கேசரிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கேசரி வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான இனிப்பாக இருந்தாலும் கல்யாண வீட்டு கேசரி கொஞ்சம் ஸ்பெஷலானது மற்றும் கூடுதல் சுவையானது. இந்த பதிவில் கல்யாண வீட்டு ஸ்பெஷல் கேசரியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- ரவை - 1/2 கப்
- சர்க்கரை - ஒரு கப்
- உப்பு - 1 சிட்டிகை
-தண்ணீர் - 1 1/2 கப்
- எண்ணெய் - 1/4 கப்
- நெய் - 1/4 கப்
- ஏலக்காய் - 4
- குங்குமப்பூ - 2 சிட்டிகை
- முந்திரி - 10
- திராட்சை - 15
செய்முறை:
- முதலில் 10 ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இதில் ரவையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். ரவை எந்த அளவிற்கு சிவந்து அந்த எண்ணெயில் பொரிந்து வர வேண்டுமோ அந்த அளவிற்கு வறுக்க வேண்டும்.
- ரவையை நன்கு வறுத்தால்தான் கேசரி ஆரிய பிறகும் கையில் ஒட்டாமல் மிருதுவாக இருக்கும். அதே சமயம் ரவையை கருக விடக்கூடாது. இப்படி நாம் வறுத்துக் கொண்டிருக்கும் அதேசமயத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- ரவை நன்றாக வறுபட்ட பிறகு இதில் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ இவற்றை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு கொதிக்க வைத்திருக்கும் தண்ணீரிலிருந்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றி மூடி போட்டு குறைந்த தீயில் வைத்து வேகவிட வேண்டும்.
- குறைந்தது ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். இப்பொழுது பாத்திரத்தை திறந்து பார்த்தால் நாம் ஊற்றிய எண்ணெயும் நெயும் மேலே பிரிந்து வந்திருக்கும். இதுதான் சரியான பதம்.
- இப்பொழுது பக்கத்து அடுப்பில் தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் மீதம் இருக்கும் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை அதில் சேர்த்து அது பொன்னிறமாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
- முந்திரி நன்கு சிவந்த பிறகு அதை எடுத்து கேசரியில் சேர்த்து விட வேண்டும். இதில் நாம் குங்குமப்பூ சேர்த்து இருப்பதால் எந்தவித கலரும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
குங்குமப்பூ இல்லாத பட்சத்தில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் கேசரி பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.
- உலர் பழங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பழங்களையும் நெய்யில் வறுத்து இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சூப்பரான கல்யாண வீட்டு கேசரி ரெடி!



Click it and Unblock the Notifications