Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
கேரளா ஸ்டைல் வெஜ் சொதி
வீட்டில் உள்ளோருக்கு இன்று இரவு ஆப்பம் செய்து கொடுங்கள். இந்த ஆப்பத்திற்கு பலரும் தேங்காய் பால் தான் ஊற்றி சாப்பிடுவார்கள். இன்று அந்த ஆப்பத்திற்கு கேரளா ஸ்டைல் வெஜ் சொதி செய்து கொடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமாக சாப்பிட கேட்கிறார்களா? தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இரவு ஆப்பம் செய்து கொடுங்கள். இந்த ஆப்பத்திற்கு பலரும் தேங்காய் பால் தான் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று அந்த ஆப்பத்திற்கு கேரளா ஸ்டைல் வெஜ் சொதி செய்து கொடுங்கள். இந்த வெஜ் சொதி மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இதை செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த சொதியை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் வெஜ் சொதி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் வெஜ் சொதி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து, நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* நீர் போன்ற தேங்காய் பால் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, பச்சை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, நீர் போன்ற தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
