Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால்
மதிய வேளையில் என்ன சமைப்பது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் சாதத்துடன் மட்டுமின்றி, புட்டுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
மதிய வேளையில் என்ன சமைப்பது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் சாதத்துடன் மட்டுமின்றி, புட்டுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* பாசிப் பருப்பு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் பச்சை பயறை நீருடன் போட்டு, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பாசிப் பருப்பை கழுவிப் போட்டு, சிறிது நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
* பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து, மென்மையாக வதக்க வேண்டும். அதன் பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தைப் போட்டு நீர் சிறிது சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு, பருப்புடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
