Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி... இட்லி, தோசைக்கு இந்த சட்னி வித்தியாசமா சூப்பரா இருக்கும்..ட்ரை பண்ணுங்க!
Kerala Style Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசை என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான். தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இட்லி, தோசை என்றால் அதற்கு பெரும்பாலும் தயாரிக்கப்படும் எளிதான மற்றும் சுவையான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். சூடான இட்லிக்கு காரமான தேங்காய் சட்னி எப்போதுமே பொருத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்க்கும் தேங்காய் சட்னி தயாரிக்கும் விதம் மாறுபடும். வடஇந்தியாவில் தேங்காய் சட்னியில் பொதுவாக தயிர் சேர்க்கப்படும். அதேபோல ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு ஏற்ப சட்னி அரைக்கும் முறை மாறுபடும். அந்த வகையில் கேரளாவுக்கென ஒரு வித்தியாசமான தேங்காய் சட்னி உள்ளது. இந்த சுவையான மற்றும் தனித்துவமான கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி அரைக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - அரை கப்
- பூண்டு - 5 பல்
- வர மிளகாய் - 5
- துருவிய தேங்காய் - 1 கப்
- இஞ்சி - 1 துண்டு
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 2
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதை சூடாக்கவும்.
- பின்னர் கடாயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து
அதை 1 நிமிஷம் மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் அதே கடாயில் வரமிளகாயை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், இஞ்சி, உப்பு மற்றும் வறுத்த
வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவையை சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
- அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும்
கடுகு போட்டு வெடிக்க விடவும்.
- பின்னர் உளுந்தம்பருப்பைச் சேர்த்து சில நொடிகள் பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- இப்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- இறுதியாக கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மேலும் சில
நொடிகள் வதக்கவும்.
- இந்த கலவையை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.
- இட்லி, தோசைக்கு சூப்பரான கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
