Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த கேரளா ஸ்பெஷல் கொள்ளு பொடியை செஞ்சு வெச்சுக்கோங்க.. சாம்பார், குழம்புன்னு எதுவும் கேக்கமாட்டாங்க..
Kerala Special Kollu Chammanthi Podi Recipe In Tamil: தினமும் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு அடிக்கடி சமைக்கவே பிடிக்காதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதத்துக்கு ஒரு அருமையான சைடு டிஷ் வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் இந்த ஒரு பொடியை செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது தான் கேரளா ஸ்பெஷல் கொள்ளு சம்மந்தி பொடி.
இந்த கொள்ளு பொடியை ஒருமுறை செய்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இப்படியான பொடியை பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் எப்போதும் வீட்டில் ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. இந்த பொடியை சூடான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு கேரளா ஸ்பெஷல் கொள்ளு சம்மந்தி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்பெஷல் கொள்ளு சம்மந்தி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1/4 கப்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 6
* இஞ்சி - 1/2 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் கொள்ளுவை
சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து, அதையும்
கொள்ளுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய
தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி,
கறிவேப்பிலை, மிளகு மற்றும் புளி சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு, வரமிளகாய் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் வறுத்த மற்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென்று பொடி
போன்று அரைத்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்பெஷல் கொள்ளு சம்மந்தி
பொடி தயார்.



Click it and Unblock the Notifications
