Latest Updates
-
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா?
கேரளா ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன் ரெசிபி
கேரளாவில் பத்து நாட்கள் நடக்கும் பிரம்மாண்டமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் பண்டிகையில் நடக்கும் ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதில் ஒன்று தான் ஓலன் ரெசிபி.
கேரளாவில் பத்து நாட்கள் நடக்கும் பிரம்மாண்டமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் பண்டிகையில் நடக்கும் ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதில் ஒன்று தான் ஓலன் ரெசிபி. ஓலன் என்பது நீர் பூசணி மற்றும் தட்டைப் பயறு கொண்டு தயாரிக்கப்படுவது. இந்த ஓலன் வெள்ளை சாதத்துடன் மட்டுமின்றி, கலவை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் ஓணம் பண்டிகை அன்று ஓலன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே ஓலன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்
* தட்டைப்பயறு - 1-2 கப்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.
குறிப்பு:
* நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.
* கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.
* ஒருவேளை தட்டை பயறை ஊற வைக்க மறந்துவிட்டால், நன்கு கொதிக்கும் சுடுநீரை தட்டை பயறை சேர்த்து, ஒரு தட்டு கொண்டு மூடி குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கலாம்.
* சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.
* ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










