Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
Kerala Mutton Pepper Fry Recipe in Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே, காலையில் இட்லி மட்டன் குழம்பு சாப்பிட்டால் தான், அந்த நாளே சிறப்பாக இருக்கும். அதனால் தான் பெரும்பாலானோரின் வீட்டில் ஞாயிற்றுக் கிழமை இட்லி, மட்டன் குழம்பு செய்யப்படுகிறது. இந்த வாரமும் உங்கள் வீட்டில் இதே காலை உணவைதான் செய்யப்போகிறீர்களா? அப்படினா வழக்கமான மட்டன் குழம்பு செய்யாம கொஞ்சம் வித்தியாசமான மட்டன் குழம்பை செய்யுங்க.

கேரளாவில் அசைவ உணவுகள் மிகவும் பிரபலமானவை. அப்படி கேரளாவின் மிகவும் பிரபலமான அசைவ உணவுகளில் ஒன்றுதான் மட்டன் பெப்பர் ரோஸ்ட். இந்த ஸ்டைல் மட்டன் வறுவலை செய்யும் போது, அது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி மட்டன் வறுவலை ஒருமுறை செய்தால், பின் எப்போதும் இந்த மாதிரி தான் மட்டன் குழம்பை செய்வீர்கள்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் வறுவலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ மட்டன்
- 2 ஸ்பூன் மிளகு
- 1 பச்சை மிளகாய்
- 8 பூண்டு பல்
- 1 அங்குல இஞ்சி
- 2 பெரிய வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது)
- 1 பழுத்த தக்காளி (மெல்லியதாக நறுக்கியது)
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் தனியா தூள்
- ½ ஸ்பூன் சோம்பு தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது)
- 2 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- முதலில் மிளகு, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறிதளவு நீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இந்த விழுதை கழுவிச் சுத்தம் செய்த ஆட்டுக்கறியுடன் சேர்க்கவும்; அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
- இந்த மசாலா கலவையை மட்டனுடன் நன்கு பிசைந்து, குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு அப்படியே ஊறவிடவும். எவ்வளவு நேரம் ஊறுகிறதோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறி, கிட்டதட்ட கரையும் வரை வதக்கவும்.
- அடுத்து தக்காளியைச் சேர்த்து, அவை முழுமையாகக் கரைந்து குழைந்துபோகும் வரை தொடர்ந்து வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்புப் பொடி மற்றும் கரம் மசாலாவை சேர்த்து, நன்கு கிளறி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீரை சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் ஊற வைத்த மட்டனையும் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கிளறவும்.
- 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு முழுமையாக வேக விடவும்.
- இல்லையெனில் இதை ஒரு குக்கருக்கு மாற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- மட்டன் கிட்டத்தட்ட வெந்ததும், தீயை அதிகரித்து, குழம்பை கெட்டியான மசாலா பதத்திற்கு கொண்டு வரவும். இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ரோஸ்ட் ரெடி!



Click it and Unblock the Notifications