Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்
கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
பாயாசம் அனைவருக்குமே பிடித்த ஒன்று. பண்டிகை அல்லது விழாக் காலங்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக பாயாசம் இருக்கும். அதே சமயம் மாலை வேளையில் கூட சிலர் பாயாசத்தை செய்து சாப்பிடுவார்கள். அத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கேரளா மட்டை அரிசி பால் பாயாசம். இது கேரளாவில் மிகவும் ஸ்பெஷலானது.

கேரளா மட்டை அரிசி என்பது வேறொன்றும் இல்லை கேரளா அரிசி தான். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இந்த பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். இந்த கேரளா மட்டை அரிசியைக் கொண்டு பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். முக்கியமாக இதை ட்ரை செய்த பின்னர் எப்படி இருந்தது என்று உங்களின் அனுபவத்தை எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரளா மட்டை அரிசி - 1/8 கப்
* பால் - 4 கப்
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் கேரளா மட்டை அரிசியை மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.
* பின் அதை நீரில் நன்கு கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்...



Click it and Unblock the Notifications