Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
Kerala Style Appala Vadai Recipe in Tamil: வரலட்சுமி விரதம் இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளில் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும் விரதமிருந்து லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள். இந்த நாளில் சிறப்பு உணவுகளை செய்து கடவுளை வழிபடுகிறார்கள். விஷேஷ நாட்கள் என்றாலே பாயாசம், வடை இல்லாமல் நிறைவுபெறாது.
பொதுவாக வடை என்றாலே மெதுவடை மற்றும் பருப்பு வடைதான் செய்வார்கள், ஆனால் நீங்கள் இன்று ஏதாவது புதிய வடையை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை முயற்சி செய்து பாருங்கள். இந்த அப்பள வடை இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும். இந்த வடை செய்தல் நீங்கள் அப்பளம், வடை என தனித்தனியாக செய்ய தேவையிருக்காது. மேலும் இது சாம்பார், ரசம், பாயாசம் என அனைத்துடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் அப்பள வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி - 1/2 கப்
- வர மிளகாய் - 8
- கடலை மாவு - 3 டீஸ்பூன்
- கருப்பு எள் - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - கெட்டியான மாவு பதத்திற்கு கரைக்கத் தேவையான அளவு
- அப்பளம் - 15
- எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு
செய்முறை:
- மாலை வடை செய்வதாக இருந்தால் காலையே இட்லி அரிசியை ஊற வைத்து விடவும்.
- அரிசி நன்கு ஊறியதும் அதை நன்றாக கழுவி அதனுடன் வர மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் சீரகம், கருப்பு எள், உப்பு மற்றும் கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இந்த வடை மாவு சற்று தண்ணீர் பதத்தில்தான் இருக்க வேண்டும், எனவே மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அப்பளத்தை ஒவ்வொன்றாக தயாரித்து வைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போடவும்.
- அப்பளம் கருகிவிடமால் இருக்க அவ்வப்போது திருப்பிவிட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் வித்தியாசமான கேரளா ஸ்டைல் அப்பள வடை ரெடி!



Click it and Unblock the Notifications
