Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கமகமக்கும்.. கீரனூர் காளான் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Keeranur Mushroom Biryani Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரத்துவிட்டதா? அப்படியானால் விடுமுறை நாளில் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் கீரனூர் காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த பிரியாணி தெருவே மணக்கும் வகையில் நல்ல மணத்துடன் இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த பக்குவத்தில் பிரியாணி செய்தால், பின் இந்த ஸ்டைலில் தான் எப்போதும் பிரியாணி செய்வீர்கள். பேச்சுலர்கள் கூட இந்த பிரியாணியை செய்யலாம்.

உங்களுக்கு கீரனூர் காளான் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரனூர் காளான் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 50 கிராம்
* இஞ்சி - 50 கிராம்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 4
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 100 மிலி
* வெங்காயம் - 4 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* காளான் - 400 கிராம் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரியாணி மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பால் - 2 கப்
* சுடுநீர் - 7 கப்
* சீரக சம்பா அரிசி - 1 கிலோ (20 நிமிடம் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
பிரியாணி மசாலாவிற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* பட்டை - 2 இன்ச்
* பிரியாணி இலை - 1
* முந்திரி - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா,
கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஈரமில்லாத மிக்சர் ஜாரில் பிரியா மசாலாவிற்கு கொடுத்த
மிளகு, சீரகம், சோம்பு, மல்லி, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை,
முந்திரி, காஷ்மீரி வரமிளகாய், கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூளை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய காளானை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பிரியாணி மசாலாவை சேர்த்து வதக்கி, 2 கப் தேங்காய்
பாலை ஊற்றி கிளற வேண்டும்.
* பின்னர் அதில் 7 கப் சுடுநீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும்,
அதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, நீர் ஓரளவு
சுண்டியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, குறைவான
தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான கீரனூர் காளான்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications