Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப முருங்கைக்கீரை இருந்தா இப்படி செய்யுங்க.. டக்கரா இருக்கும்...
Keerai Sadam Recipe In Tamil: மதிய வேளையில் உங்களால் தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்று செய்ய பிடிக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால், அதைக் கொண்டு இப்படியொரு சாதத்தை மதிய வேளையில் செய்யுங்கள்.
இந்த கீரை சாதம் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த சாதம் ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கீரை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 5 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம் பருப்பு மற்றும்
பாசிப்பருப்பை சேர்த்து நீரில் 2-3 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் பூண்டு பற்களை
தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 5 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், சாம்பார்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து
கிளறி, கழுவி ஊற வைத்துள்ள அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு, பின்
குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் நெய் ஊற்றி நன்கு
கிளறினால், சுவையான கீரை சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











