Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டுல கீரை இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க...
Keerai Pakoda Recipe In Tamil: தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் சமயத்தில் வீட்டில் நல்ல மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். உங்கள் வீட்டில் கீரை இருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான பக்கோடாவை செய்யுங்கள்.
இந்த கீரை பக்கோடா ஒரு சிறந்த ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த கீரை பக்கோடாவை எந்த கீரையைக் கொண்டும் செய்யலாம். குறிப்பாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரைக்கீரை/சிறுகீரை - 1 கைப்பிடி
* உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* அதேப் போல் உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
அதைத் துருவி நீரில் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் நறுக்கிய கீரை, துருவிய உருளைக்கிழங்கு
ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய
இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
பொதுவாக நீர் சேர்க்க தேவையில்லை. ஒருவேளை மிகவும் வறண்டு இருந்தால்,
லேசாக நீரைத் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள
கலவையை சிறிது எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான கீரை பக்கோடா தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications