Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
கீரை வாங்குனா இந்த பக்குவத்தில் மண்டி செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் 1 தட்டு அதிகமா சாப்பிடுவாங்க...!
Keerai Mandi Recipe in Tamil: கீரை என்றாலே பாகுபாடில்லாமல் உடலுக்கு எண்ணற்ற சத்துக்களை வழங்க கூடியது. கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். கீரையை வைத்து பொரியல், கூட்டு, மற்றும் சூப் செய்திருப்போம். ஏன் சட்னி கூட செய்திருப்போம். ஆனால் முருங்கை கீரையை வைத்து மண்டி செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- முருங்கைகீரை - 1 கப்
- அரிசி கலைந்த நீர் - ½ கப்
- கசகசா - 50 கிராம்
- தேங்காய் - 1 மூடி
- பெரிய வெங்காயம் - 2
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 3
- கடலைப் பருப்பு - 2 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் -¼ டீ ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- உங்கள் விருப்பப்படி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கசகசாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவைத்து ஆற வைக்கவும்.
- பின் அதை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- முருங்கை கீரையை உருவி குச்சிகள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- முருங்கை கீரையில் படிந்திருக்கும் மண், தூசுகளை நீக்க பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் கீரையை கழுவி கைகளால் தனியே எடுத்து வைக்கவும்.
- கீரை வகைகளை தண்ணீரில் கழுவி வடித்தால், அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடி பகுதியில் தங்கியிருக்கும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கீரை, அரிசி கலைந்த நீர், மற்றும் அரைத்து வைத்த கசகசாவை சேர்த்து நன்கு வேக விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதை வெந்து கொண்டிருக்கும் கீரை உடன் சேர்த்து கிளறவும்.
- கீரை நன்றாக வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான கீரை மண்டி ரெடி!



Click it and Unblock the Notifications
