Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
1 கட்டு கீரை இருந்தா இந்த மாதிரி சூப்பரான ஸ்னாக் செஞ்சு கொடுங்க... ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்...!
Keerai Cutlet Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் நொறுக்குத்தீனிகள் ஆரோக்கியமானதாக இருக்குமா என்றால் நிச்சயம் அது கேள்விக்குறிதான். எனவே வீட்டிலேயே நாம சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை செய்து சாப்பிடலாம்.
கீரைகள் என்றால் பொதுவாக பலருக்கும் பிடிக்காது. ஆனால் அவற்றை சுவையான உணவுகளுடன் சேர்த்து செய்து கொடுக்கும் போது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி கீரை சேர்த்து செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான நொறுக்குதீனிதான் கீரை கட்லெட். அதுவும் இந்த மழைக்காலத்தில் செய்வதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் ஆரோக்கியமான கீரை கட்லெட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- 1 கட்டு கீரை(ஏதாவது ஒரு கீரை)
- ¼ கப் ப்ரெஷ் பட்டாணி
- 2 பச்சை மிளகாய்
- ½ அங்குல இஞ்சி
- 3 உருளைக்கிழங்கு
- 2 ஸ்பூன் சோள மாவு
- 2 ஸ்பூன் கடலை மாவு
- 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 2 ஸ்பூன் சீரகத் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- வறுக்க எண்ணெய்
- பிரெட் துகள் - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை நன்றாக வேகவைக்கவும். பின்னர் தோலை உரித்து நன்றாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- கீரை இலைகளை தண்டுடன் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பட்டாணியுடன் சேர்த்து, கீரை இலைகளை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
- பின்னர் கீரை மற்றும் பட்டாணியை குளிர்ந்த நீரில் போட்டு ஆற விடவும்.
- பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி மிக்ஸிக்கு மாற்றவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- பிசைந்த உருளைக்கிழங்கு கலவையில், மசாலாப் பொருட்கள், சோள மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றை சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த கீரை கலவையை இதில் சேர்த்து பிசையவும். கலவை நன்றாக மென்மையாகும் வரை பிசையவும். தேவைப்பட்டால் கூடுதல் சோள மாவை சேர்த்து பிசையவும்.
- பின்னர் இந்த கலவையை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி கட்லெட் போல தட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதை ப்ரெட் துகள்களில் நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வறுக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக போட்டு ஆழமாக வறுத்தெடுக்கவும்.
- சூடான கீரை கட்லெட் ரெடி!



Click it and Unblock the Notifications
