For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காயி ஹோலிச் ரெசிபி /நரியல் பூரண போளி ரெசிபி /கொப்பரி ஒப்பட்டு ரெசிபி

காயி ஹோலிச் ரெசிபி என்பது கர்நாடகவில் முக்கியமாக பண்டிகையின் போது செய்யப்படும் ரெசிபி ஆகும். இதற்கு தேங்காய் போளி என்ற பெயரும் உண்டு.இங்கே இதை எப்படி செய்வது என்பதற்கு வீடியோ மற்றும் செய்முறை விளக்க ப

Posted By: R. SUGANTHI Rajalingam
|

காயி ஹோலிச் ரெசிபி என்பது கர்நாடகவில் முக்கியமாக பண்டிகையின் போது செய்யப்படும் ரெசிபி ஆகும். இதற்கு தேங்காய் போளி என்ற பெயரும் உண்டு. இந்த இனிமையான ரெசிபி தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தை கொண்டு செய்யப்படுகிறது.

இந்த கொப்பரி ஒப்பட்டு ரெசிபி தென்னிந்தியாவிலிருந்து தோன்றிய உணவு முறையாகும். பீலி ஒப்பட்டு அல்லது பூரண போளி போன்றவை மகாராஷ்டிர பாரம்பரிய உணவிலிருந்து வந்தவை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அந்த போளியை நிரப்புவது தான்.

வெல்லத்தின் மொறு மொறுப்பான டேஸ்ட்டும் மென்மையான வெளிப்பகுதியும் இதன் சுவையை பலமடங்கு பெருகச் செய்கிறது. காயி ஹோலிச் ரெசிபி செய்வதற்கு கொஞ்சம் முன் அனுபவம் உள்ள பெரியவர்களின் உதவி இருந்தால் நல்லது. ஆனால் அந்த கவலை வேண்டாம் நாங்கள் உங்களுக்கு இங்கே கூறும் பொருட்களின் அளவு களையும் செய்முறைகளையும் பயன்படுத்தி வீட்டிலேயே நீங்கள் இதை எளிதாக செய்து விடலாம். அதற்கான செய்முறை விளக்க படமும் வீடியோ தொகுப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

காயி ஹோலிச் ரெசிபி வீடியோ

காயி ஹோலிச் ரெசிபி
காயி ஹோலிச் ரெசிபி /நரியல் பூரண போளி ரெசிபி /கொப்பரி ஒப்பட்டு ரெசிபி /கோக்கனட் பூரண போளி ரெசிபி
Prep Time
5 மணி நேரம்
Cook Time
5 மணி நேரம்
Total Time
6 மணி நேரம்

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 4

Ingredients
  • ரவை (சிரோட்டி ரவை) - 1 கப்

    மைதா - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 1/4 கப்

    தேங்காய் துருவல் - 1 பெளல்

    வெல்லம் - 1 கப்

    ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன் +1 கப்

    பிளாஸ்டிக் சீட்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. ரவையை ஒரு கலக்கின்ற பெளலில் எடுத்து கொள்ளவும்

    2. அதனுடன் மைதா மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்

    3. நன்றாக கலக்கவும்

    4. இப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்

    5. கொஞ்சம் கொஞ்சமாக 3/4 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து நல்ல கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்

    6. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். 5 நிமிடங்கள் மறுபடியும் பிசையவும்.

    7. பிறகு 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் திரும்பவும் சேர்க்க வேண்டும்

    8. ஒரு தட்டை கொண்டு 5 மணி நேரம் மூடி விட வேண்டும்.

    9. தேங்காய் துருவலை மிக்ஸி சாரில் போடவும்

    10. இதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்

    11. நன்றாக வழுவழுவென அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    12. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்

    13. உடனடியாக 1/4 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

    14. வெல்லம் முழுவதுமாக கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    15. அரைத்த தேங்காயை வெல்லத்துடன் சேர்க்கவும்.

    16. நன்றாக கிளறிக் கொண்டே இருக்கே வேண்டும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்கலாம்.

    17. 10-15 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். கலவையானது கெட்டியான பதம் வந்ததும் அடுப்பிலிருந்து கடாயை எடுத்து விடவும்.

    18. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

    19. 10 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும்

    20. கலவையானது ஆறிய பிறகு சின்ன சின்ன பந்துகளாக உள்ளே வைக்கும் பூரணத்தை உருட்டவும்

    21. தேய்க்கும் பலகையை எடுத்து கொள்ளவும்.

    22. அதன் மேல் பிளாஸ்டிக் சீட் வைக்க வேண்டும்.

    23. சீட் டின் மீது எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்

    24. மீடியம் வடிவில் மாவை எடுத்து கொள்ளவும்

    25. மாவை தட்டையாக அப்பளம் மாதிரி தட்டி பூரணத்தை நடுவில் வைக்க வேண்டும்

    26. திறந்த எல்லா பக்கங்களையும் மாவை கொண்டு மூடி தட்டையாக தட்டிக் கொள்ளவும்

    27. எண்ணெய் தடவிய சீட்டில் வைத்து கையை கொண்டு இன்னும் தட்டையாக்கி கொள்ளவும்

    28. தேய்க்கும் கட்டையிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்

    29. மெல்லிய ரொட்டியாக தேய்க்கும் கட்டையை கொண்டு தேய்க்க வேண்டும்.

    30. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

    31. பிளாஸ்டிக் சீட்டை தோசைக் கல்லுக்கு மேலாக பிடித்து கொண்டு,ரொட்டியை மெதுவாக பிளாஸ்டிக் சீட்டிலிருந்து எடுத்து தோசைக் கல்லில் போடவும்.

    32. ஒரு பக்கம் வேகும் போது மறுபக்கம் எண்ணெய் விடவும்

    33. பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு வேக வைக்கவும்

    34. சூடாக எடுத்து பரிமாறவும்.

Instructions
  • 1.மாவானது மென்மையான பதம் வரும் வரை நன்றாக பிசையவும்
  • 2.பூரணத்தை சமைக்கும் போது பக்கவாட்டில் ஒட்டியிருப்பதை சேர்த்து மையப்பகுதிக்கு கொண்டு வந்து சமைக்க வேண்டும். அல்வா சமைப்பது போல் சமைக்க வேண்டும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 போளி
  • கலோரிகள் - 256 கலோரிகள்
  • கொழுப்பு - 11 கிராம்
  • புரோட்டீன் - 2 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 35 கிராம்
  • சுகர் - 23 கிராம்

செய்முறை படத்துடன் விளக்கம் - காயி ஹோலிச் ரெசிபி செய்வது எப்படி

1. ரவையை ஒரு கலக்கின்ற பெளலில் எடுத்து கொள்ளவும்

2. அதனுடன் மைதா மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்

3. நன்றாக கலக்கவும்

4. இப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்

5. கொஞ்சம் கொஞ்சமாக 3/4 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து நல்ல கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்

6. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். 5 நிமிடங்கள் மறுபடியும் பிசையவும்.

7. பிறகு 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் திரும்பவும் சேர்க்க வேண்டும்

8. ஒரு தட்டை கொண்டு 5 மணி நேரம் மூடி விட வேண்டும்.

9. தேங்காய் துருவலை மிக்ஸி சாரில் போடவும்

10. இதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்

11. நன்றாக வழுவழுவென அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

12. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்

13. உடனடியாக 1/4 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

14. வெல்லம் முழுவதுமாக கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

15. அரைத்த தேங்காயை வெல்லத்துடன் சேர்க்கவும்.

16. நன்றாக கிளறிக் கொண்டே இருக்கே வேண்டும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்கலாம்.

17. 10-15 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். கலவையானது கெட்டியான பதம் வந்ததும் அடுப்பிலிருந்து கடாயை எடுத்து விடவும்.

18. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

19. 10 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும்

20. கலவையானது ஆறிய பிறகு சின்ன சின்ன பந்துகளாக உள்ளே வைக்கும் பூரணத்தை உருட்டவும்

21. தேய்க்கும் பலகையை எடுத்து கொள்ளவும்.

22. அதன் மேல் பிளாஸ்டிக் சீட் வைக்க வேண்டும்.

23. சீட் டின் மீது எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்

24. மீடியம் வடிவில் மாவை எடுத்து கொள்ளவும்

25. மாவை தட்டையாக அப்பளம் மாதிரி தட்டி பூரணத்தை நடுவில் வைக்க வேண்டும்

26. திறந்த எல்லா பக்கங்களையும் மாவை கொண்டு மூடி தட்டையாக தட்டிக் கொள்ளவும்

27. எண்ணெய் தடவிய சீட்டில் வைத்து கையை கொண்டு இன்னும் தட்டையாக்கி கொள்ளவும்

28. தேய்க்கும் கட்டையிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்

29. மெல்லிய ரொட்டியாக தேய்க்கும் கட்டையை கொண்டு தேய்க்க வேண்டும்.

30. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

31. பிளாஸ்டிக் சீட்டை தோசைக் கல்லுக்கு மேலாக பிடித்து கொண்டு,ரொட்டியை மெதுவாக பிளாஸ்டிக் சீட்டிலிருந்து எடுத்து தோசைக் கல்லில் போடவும்.

32. ஒரு பக்கம் வேகும் போது மறுபக்கம் எண்ணெய் விடவும்

33. பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு வேக வைக்கவும்

34. சூடாக எடுத்து பரிமாறவும்.

[ 4.5 of 5 - 125 Users]
English summary

காயி ஹோலிச் ரெசிபி /நரியல் பூரண போளி ரெசிபி /கொப்பரி ஒப்பட்டு ரெசிபி /கோக்கனட் பூரண போளி ரெசிபி

Kayi holige is a traditional recipe of Karnataka that is prepared mainly during the festive season. Also known as coconut poli, this sweet recipe is prepared with grated coconut and jaggery.
Story first published: Thursday, September 21, 2017, 18:30 [IST]
Desktop Bottom Promotion