Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
1/4 கப் வேர்க்கடலையும், 4 கத்திரிக்காயும் வெச்சு இப்படியொரு குழம்பு செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Brinjal Puli Curry Recipe In Tamil: மதிய வேளையில் என்ன குழம்பு செய்வதென்று தெரியாமல் தினமும் கஷ்டப்படுகிறீர்களா? எப்போதும் ஒரே சுவையில் குழம்பு செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் வேர்க்கடலையும், கத்திரிக்காயும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு வித்தியாசமான சுவையில் புளிக்குழம்பு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் புளிக்குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* பச்சை வேர்க்கடலை - 1/4 கப்
* எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 10
குழம்பு செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கத்திரிக்காய் - 4 (நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்துக் கொள்ளவும்)
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 10
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 12 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2
* மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் எள்ளு மற்றும் வெந்தய விதைகளை சேர்த்து வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து அதையும்
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட கத்திரிக்காயை சேர்த்து வதக்க
வேண்டும். கத்திரிக்காய் முக்கால்வாசி வெந்ததும், அதை ஒருதட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், கடுகு, சீரகம், மிளகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் அளவில் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி ஒரு கொதி வந்ததும்,
கத்திரிக்காயை சேர்த்து மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை
சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய்
புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: cookpad.com



Click it and Unblock the Notifications
