Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Kathirikai Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஈஸியான சைடிஷ் என்றால் எப்போதும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னியிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னிகளைத்தான் நாம் அரைப்போம். இது காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்தும். வழக்கமான தேங்காய், தக்காளி மற்றும் மிளகாய் சட்னிக்குப் பதிலாக புதிய சட்னிகளை முயற்சிக்க விரும்புபவர்கள் காய்கறிகளில் சட்னி அரைக்க முயற்சிக்கலாம்.
காய்கறி சட்னி என்று வரும்போது பெரும்பாலும் கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை வைத்துதான் சட்னி அரைப்போம். ஆனால் பலரும் விரும்பாத கத்தரிக்காயை வைத்தும் அட்டகாசமான சட்னி செய்யலாம் என்பது நம்மில் பலரும் அறியாதது. அதிலும் ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காயை சட்னி அரைக்கும் போது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துக்கும் அது அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கத்திரிக்காய் - கால் கிலோ
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- கடுகு - ஒரு டீஸ்பூன்
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- பூண்டு - ஐந்து பல்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- சின்ன வெங்காயம் - 20
- தக்காளி - 2
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
- மல்லித்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
- கத்திரிக்காயை நீளமாக அரிந்து தண்ணீரில் ஊற போடவும்.
- புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
- சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து விட்டு, எள்ளை கல் இல்லாமல் அரித்து எடுத்து ஈரமில்லாமல் வறுத்து எடுக்கவும்.
- சீரகம், எள் இரண்டையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மிளகு, பூண்டு தட்டி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயத்தை கடாயில் போட்டு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதாகவு. வெங்காயம் வதங்கியதும் , தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு கத்திரிக்காயை அதில் போட்டு மூடிபோட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
- கத்திரிக்காய் வெந்ததும் அதில்மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- சட்னி நன்கு கெட்டியானதும் இறுதியாக அரைத்து வைத்த எள், சீரக பேஸ்ட்டை போட்டு நன்றாக கிளற வேண்டும்,
- சட்னி நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமமாலி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications