Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
3 கத்திரிக்காய் இருந்தா.. ஒருவாட்டி இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. இட்லி தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்...
Kathirikai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி அரைப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு 3 கத்திரிக்காய் உள்ளதா? அப்படியெனில் அந்த கத்திரிக்காய் கொண்டு சிம்பிளாக ஒரு சட்னியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னியை செய்தால், இதுவரை கத்திரிக்காயை கண்டு ஓடுபவர்கள், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த சட்னி ரொம்பவும் பிடிக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 8 பல்
* பெரிய கத்திரிக்காய் - 3
* தக்காளி - 2
* புளி - 1 சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு வேகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் புளியை சேர்த்து, தக்காளி
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து, பச்சை
வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும். இந்த சட்னி சற்று கெட்டியாக இருந்தால் தான்
சாப்பிட நன்றாக இருக்கும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கத்திரிக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications