Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த தொகையலை செஞ்சு பாருங்க... 1 வாரத்துக்கு இட்லி, தோசைக்கு வைச்சு சாப்பிடலாம்...!
Karuveppilai Thogayal Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான சட்னி செய்யாமல் புதிதாக ஏதாவது சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலை கொண்டு ஒரு அட்டகாசமான தொகையலை செஞ்சு பாருங்க. அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் தொகையலை செய்யுங்கள். இப்படி கறிவேப்பிலை தொகையல் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இது இட்லி,, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை தொகையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை தொகையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 10 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- அரை ஸ்பூன் வெல்லம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் கப் புதினா
- கால் கப் கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 10 வர மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் புளிச்சாறு, ½ டீஸ்பூன் வெல்லம், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் பெருங்காயம், வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், புளி சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலேயே வதக்கவும்.
- வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
- உப்பு, வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பான துவையலாக அரைக்கவும்.
- அரைக்கும்போது தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மேலும் சேர்க்கலாம்.
- பின்னர் இதை கிண்ணத்திற்கு மாற்றவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும் இது அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications