Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2 கைப்பிடி கறிவேப்பிலையும், 15 பல் பூண்டும் இருந்தா.. இந்த தொக்கு செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Karuveppilai Poondu Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் கறிவேப்பிலை நிறைய உள்ளதா? அதை தூக்கிப் போட மனமில்லையா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். அதுவும் கறிவேப்பிலையுடன் பூண்டு சேர்த்து ஒருமுறை தொக்கு செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
குறிப்பாக இந்த தொக்கு இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். கறிவேப்பிலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்யும் போது, கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கறிவேப்பிலை பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை பூண்டு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* மல்லி - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கைப்பிடி
* பூண்டு - 5 பல் (தட்டியது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (சிறிதளவு நீரில் ஊற வைத்து, சற்று
கெட்டியாக கரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, சீரகம்,
வெந்தயம், மல்லி, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், கழுவி காய வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து, மிதமான
தீயில் வைத்து, நன்கு மொறுமொறுவென்று வறுக்க வேண்டும்.
* பின் அதில் 5 பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு வறுத்து, இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு புளியை சிறிதளவு நீரில் ஊற வைத்து, சற்று கெட்டியாக கரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களையும், கறிவேப்பிலை மற்றும்
பூண்டு பற்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த கறிவேப்பிலையை சேர்த்து கிளறி,
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாம்பார் தூளை
சேர்த்து கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் மிதமான தீயில் வைத்து
எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* எண்ணெய் பிரிந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம்
வேக வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை பூண்டு தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications