Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Karuveppilai Masala Sadam Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி வெட்ரைட்டி ரைஸ் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? பொதுவாக வெரைட்டி சாதம் என்றால் புளி சாதம், லெமன் சாதம் மற்றும் தேங்காய் சாதம்தான் பெரும்பாலான வீடுகளில் சமைப்பார்கள். ஆனால் வெரைட்டி சாதத்தில் பல வித்தியாசமான உணவுகள் உள்ளது. அதில் ஒன்றுதான் கறிவேப்பில்லை மசாலா சாதம்.

இந்த அட்டகாசமான கறிவேப்பிலை மசாலா சாதம் வழக்கமான வெரைட்டி சாதம் போல இருக்காது. இதில் சேர்க்கப்படும் சில பொருட்களால் இது வித்தியாசமானதாகவும், கிட்டதட்ட பிரியாணி சுவையிலும் இருக்கும். இந்த கறிவேப்பிலை மசாலா சாதம், சுவையானதாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள், பிள்ளைகளுக்கு லன்ச் செய்து கொடுக்கும் அம்மாக்கள் இந்த மாதிரியான கறிவேப்பிலை சாதத்தை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும். முக்கியமாக கறிவேப்பிலை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு கறிவேப்பிலை மசாலா சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா கறிவேப்பிலை மசாலா சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் சமைத்த சாதம்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் நெய்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- ¼ கப் வேக வைத்த பட்டாணி
- தேவையான அளவு உப்பு
- 2 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- சிறிது முந்திரிப் பருப்பு
- ¼ கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எள்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- அரிசியை வேக வைத்து., ஒரு அகலமான பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.
- ஒரு கடாயில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- பின்னர் எள்ளை சேர்த்து வதக்கவும். எள் வெடிக்கத் தொடங்கி, பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பிறகு கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- இதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அது சூடாக இருக்கும்போதே அரைத்துக்கொள்ளவும்.
- இதை முன்கூட்டியே தயாரித்து ஒரு வாரம் வரை சேமித்து வைக்கலாம்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து கிளறவும்.
- மசாலா நன்கு கெட்டியானதும் இதனுடன் சமைத்த சாதத்தைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த மசாலாப்பொடியை சேர்த்து மென்மையாக கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை வறுத்துச் சேர்க்கலாம்
- முந்திரிக்கு பதில் வேர்க்கடலை கூட சேர்க்கலாம்.
- அவ்வளவுதான் அட்டகாசமான கறிவேப்பிலை மசாலா சாதம் ரெடி.



Click it and Unblock the Notifications