Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா... இந்த ஸ்டைலில் சட்னி அரைச்சுப் பாருங்க... வேற லெவல்-ல இருக்கும்..
Karuveppilai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலை கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் சட்னியை செய்யுங்கள். இப்படி கறிவேப்பிலை சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்ன பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு
சேர்த்து நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன்
பெருங்காயத் தூள், புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து 1 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை போட்டு,
அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை
ஊற்றி அலசி, சட்னியில் ஊற்ற வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2
டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை மற்றும் 1 வரமிளகாயை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கறிவேப்பிலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
