Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
அடுத்தமுறை கொண்டைக்கடலை குருமாவை இப்படி செய்யுங்க.. மட்டன் குழம்பே தோத்துடும்...
Karuppu Kondakadalai Kuruma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அட்டகாசமான சுவையைக் கொண்ட கருப்பு கொண்டைக்கடலை குருமாவை செய்யுங்கள்.
இந்த கொண்டைக்கடலை மசாலா சப்பாத்தி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா மட்டன் குழம்பை தோற்கடிக்கும் வகையில் அட்டகாசமான ருசியைக் கொண்டிருக்கும். அதோடு இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குருமா மசாலாவிற்கு...
* வெஜிடேபிள் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1/4 கப்
* தக்காளி - 1
* தண்ணீர் - 1 கப்
பிற பொருட்கள்...
* கருப்பு கொண்டைக்கடலை/சுண்டல் - 1 கப்
* வெஜிடேபிள் ஸ்பூன் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* முந்திரி - 20
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு கொண்டைக்கடலை/ சுண்டலை நீரில் குறைந்தது 7
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கொண்டைக்கடலை நன்கு ஊறியதும்,
நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குருமா மசாலாவிற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு,
கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்
* பின் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதேப் போல் தேங்காய் மற்றும் முந்திரியையும் ஒன்றாக மிக்சர் ஜாரில்
போட்டு நீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அதன் பின் உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள்
தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி கிளற
வேண்டும். பின் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, குக்கரை
மூடி 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொண்டைக்கடலையை வேக வைக்க
வேண்டும். (விசிலை கணக்கில் கொள்ள வேண்டாம். 20 நிமிடம் வரை சுண்டலை
வேக வைக்க வேண்டும்.)
* 20 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு, விசில் போனதும் குக்கரைத்
திறக்க வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த தேங்காய்
விழுதை சேர்த்து, 1/2-1 கப் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் குறைவான
தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
