Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
கருப்பட்டி புட்டிங்
நீங்கள் இதுவரை உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான எந்த ஒரு ரெசிபியையும் செய்து கொடுத்ததில்லையா? அப்படியானால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் கருப்பட்டி புட்டிங் செய்து கொடுங்கள்.
நீங்கள் இதுவரை உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான எந்த ஒரு ரெசிபியையும் செய்து கொடுத்ததில்லையா? ஆனால் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் கருப்பட்டி புட்டிங் செய்து கொடுங்கள். இந்த கருப்பட்டி புட்டிங் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு கருப்பட்டி புட்டிங் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பட்டி புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பட்டி - 2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* தேங்காய் பால் - 2 கப்
* அகர் அகர்/கடல் பாசி - 10 கிராம்
* சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கடல் பாசியை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டி முற்றிலும் உருகும் வரை குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள கடல் பாசியை அடுப்பில் உள்ள கருப்பட்டியுடன் சேர்த்து கிளறி, குறைவான தீயில் கடல்பாசியை முற்றிலும் உருக வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு அதை வடிகட்டி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காய் பால் மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இப்போது ஒரு அகலமான மற்றும் சற்று தட்டையான பாத்திரத்தில் இதை ஊற்றி, ஃப்ரிட்ஜில் செட் ஆகும் வரை வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு கத்தியால் துண்டுகளாக வெட்டினால், கருப்பட்டி புட்டிங் தயார்.
குறிப்பு:
* கருப்பட்டி இல்லாவிட்டால், வெல்லத்தைக் கொண்டும் தயாரிக்கலாம்.
* உங்களுக்கு சுக்கு பொடி ஃப்ளேவர் பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக ஏலக்காய் பவுடர் அல்லது வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
* வேண்டுமானால் தேங்காய் பாலுக்கு பதிலாக, வழக்கமான பாலை சேர்த்துக் கொள்ளலாம்.
* கடல் பாசியுடன் பால் சேர்க்கும் போது அதை கொதிக்க வைத்து சேர்க்கக்கூடாது. இல்லாவிட்டால் அது திரிந்துவிடும். எனவே குளிர்ந்த பாலை தான் சேர்க்க வேண்டும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications