Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
கார்த்திகை தீபத்துக்கு சாப்ட்டான பொரி அரிசி உருண்டை செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Karthigai Deepam Special Pori Arisi Urundai: இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழாவானது டிசம்பர் 03 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரித்து, பூஜைக்கு பலகாரங்களை செய்து படைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் 1 கப் புழுங்கல் அரிசி இருந்தால், அதைக் கொண்டு பொரி அரிசி உருண்டையை செய்யுங்கள். இந்த உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது பஞ்சு போன்று மென்மையாக இருப்பதால், குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபத்தன்று பொரி அரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி அரிசி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 2 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் புழுங்கல்
அரிசியை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசியுடன், 2 ஏலக்காயை சேர்த்து, ரவா
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/4 கப் நீரை
ஊற்றி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 2 சிட்டிகை உப்பை
சேர்த்து வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து
கிளறி, பின் அரைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* நீர் வற்றி மாவு சற்று கெட்டியானதும், அதை இறக்கி, வெதுவெதுப்பான
நிலைக்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, பின் துருவிய தேங்காயின் மேல் பிரட்டினால், சுவையான பொரி
அரிசி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications









