Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பொரி உருண்டை - 15 நிமிஷத்தில் மொறுமொறுன்னு எப்படி செய்றது-ன்னு பாருங்க..
Karthigai Deepam Special Pori Urundai Recipe In Tamil: கார்த்திகை தீபம் என்றாலே வீட்டை தீபங்களால் அலங்கரிப்பது தான் நினைவிற்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது என்றால் பொரி உருண்டை என்றே கூறலாம். கார்த்திகை தீபத்திருநாளில் பொரி உருண்டையை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த கார்த்திகை தீபத்திற்கு நீங்கள் இதுவரை எந்த ஸ்வீட்டும் வீட்டில் செய்யவில்லை என்றால், வீட்டில் பொரி இருந்தால், அதைக் கொண்டு 15 நிமிடத்தில் மொறுமொறுப்பான பொரி உருண்டையை டக்கென்று செய்யுங்கள். மேலும் பொரி உருண்டையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீப ஸ்பெஷல் பொரி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 4 கப்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லத்தை எடுத்து, அதில்
1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு, வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அகலமான பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல நீரை மீண்டும்
அடுப்பில் வைத்து, உயர் தீயில் வைத்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* வெல்லப்பாகுவின் பதம் பார்க்க வேண்டும். வெல்லப் பாகுவின் சரியான
பதம் என்றால், ஒரு சிறிய கிண்ணத்தில் நீரை எடுத்து, அதில் சிறிது
பாகுவை ஊற்றி, அதைத் திரட்டினால் கட்டி போன்று இறுக்கமாக வேண்டும்.
அப்படி இருந்தால் பாகு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* பாகு சரியான பதத்திற்கு வந்ததும், அதில் 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1
சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, உடனே பொரியை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் கையில் நெய்யை தடவி, சூடாக இருக்கும் போதே, உருண்டை பிடித்து
வைத்தால், சுவையான பொரி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications