Just In
- 5 hrs ago
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- 6 hrs ago
செட்டிநாடு வரமிளகாய் சட்னி
- 6 hrs ago
பீர் அடிக்குறது ரொம்ப பிடிச்சவங்க இத படிக்காதீங்க... ஏனா புது ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு சாதகமா இல்ல...!
- 7 hrs ago
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...
Don't Miss
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம்
கார்த்திகை தீபம் வரப்போகிறது. அந்த கார்த்திகை தீபத்தன்று பலரும் தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பார்கள். அதில் பொரியுருண்டை, வடை, மாவிளக்கு, அப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வருட கார்த்திகை தீபத்தன்று ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பலகாரம் செய்ய நினைத்தால், நெய் அப்பம் செய்யுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியைக் கொண்டது.
இப்போது கார்த்தை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி அல்லது இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
* அவல் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 சிட்டிகை
* சமையல் சோடா - 2 பெரிய சிட்டிகை
* துருவிய அல்லது பொடியாக்கப்பட்ட வெல்லம் - 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
* நெய் - அப்பம் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவலை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கழுவி, மிக்ஸர் ஜாரில் போட்டு, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி விட வேண்டும். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். எனவே அரைக்கும் போது அதிக நீரை சேர்த்து விடாதீர்கள்.
* பிறகு அரைத்த மாவை குறைந்தது 7 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் அப்பம் நன்கு மென்மையாக இருக்கும். பின் அந்த மாவில் சமையல் சோடா சேர்த்து கிளறி, 10 நிமிடம் அப்படியே வையுங்கள்.
* அதன் பின்பு பணியார கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* பின் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, தீயைக் குறைத்து, மூடி வைத்து வேக வையுங்கள்.
* 2-3 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அப்பத்தை திருப்பிப் போடுங்கள். அப்பம் நன்கு வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு ஸ்பூனின் பின்புறத்தைக் கொண்டு குத்திப் பாருங்கள். மாவானது ஸ்பூனில் ஒட்டாமல் இருந்தால், அப்பம் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்போது சுவையான நெய் அப்பம் தயார்.
குறிப்பு:
* அப்பத்திற்கான மாவு மிகவும் கெட்டியாக இல்லதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கெட்யான மாவு, அப்பத்தை கடினமாக்கிவிடும்.
*வேண்டுமானால், அரைக்கும் போது, மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயை சேர்த்து கொள்ளலாம்.
* மாவை தயாரித்த பின் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்தால், அப்பம் ருசியாக இருக்கும்.
* உங்களுக்கு வேண்டுமானால் அப்பம் தயாரிக்கும் போது நல்லெண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாக பயன்படுத்தலாம்.
* அப்பம் மிகவும் மென்மையாக இருக்க வேண்டுமானால், அரிசி மற்றும் பருப்புக்களை 5 மணிநேரம் ஊற வையுங்கள்.