Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
கற்பூரவல்லி இலையை இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்!
Karpooravalli Chutney Recipe in Tamil: மழைக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். பெரும்பாலான வீடுகளில் இருக்கும் சளியை விரட்டும் பொருட்களில் முக்கியமானது கற்பூரவல்லி இலை. எனவே கற்பூரவல்லி இலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசை போன்றவற்றிலிருந்து வைத்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும். சரி வாங்க கற்பூரவல்லி இலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- கற்பூரவல்லி இலை - 12 அல்லது 15
- தேங்காய் - ½ மூடி
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பூண்டு - 6 அல்லது 8 பல்
- பச்சை மிளகாய் - 2
- வர மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 12 அல்லது 15
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- கற்பூரவல்லி இலைகளை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக
அலசி மண் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
எடுத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தண்ணீரில் அலசி
சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு
சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- அதனுடன் சீரகம், மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய், புளி,
தோலுரித்து வைத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக
வறுக்கவும்.
- பின் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்த கொத்தமல்லி இலை மற்றும்
கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
- கடைசியாக தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பை
சேர்த்து அரைத்து எடுத்தால் சளியை விரட்டும் ஆரோக்கியமான கற்பூரவல்லி
சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை மற்றும் சாதம் என அனைத்திற்கும் ஏற்றதாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications
