Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
கர்நாடகா பேமஸ் வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணியை விட அட்டகாசமா இருக்கும்
Karnataka Vegetable Pualo Recipe in Tamil: வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஆம் எனில் இந்த புதிய கர்நாடகா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான புலாவ் போலவோ அல்லது வெஜ் பிரியாணி போலவோ இது நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான். இந்த வெஜ் புலாவ் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானதாகும். அங்கு கிட்டதட்ட அனைத்து கடைகளிலும் இது பிரதான உணவாக இருக்கும்.

உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு காரம் குறைவான அதேசமயம் சுவையான ஒரு உணவை நீங்கள் செய்து கொடுக்க விரும்பினால் இது அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் காய்கறிகள் என்றாலே ஓடுபவர்கள் கூட இந்த வெஜிடபுள் புலாவை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவை செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமும் அல்ல.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா வெஜிடபிள் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- தண்ணீர் - 2 கப் (அரிசியை ஊறவைக்க)
- காய்கறிகள் - 1/2 கப் (1 கேரட், 5 பீன்ஸ், 1 உருளைக்கிழங்கு, ஒரு
கைப்பிடி அளவு பட்டாணி)
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 1
- கல்பாசி - சிறிதளவு
- மராட்டி மொக்கு - 1
- அன்னாசிப்பூ - 1
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி - (பொடியாக நறுக்கியது)
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 6
- புதினா இலை - ஒரு கைப்பிடி
- பெரிய வெங்காயம் - 1/2
- இலவங்கப்பட்டை - 2 இன்ச்
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு பல் - 10
- தண்ணீர் - தேவையான அளவு (விழுதாக அரைப்பதற்கு)
செய்முறை:
- முதலில் ஒரு கப் அரிசியைக் கழுவி, இரண்டு கோப்பை நீரில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். காய்கறிகளைக் கழுவி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும்.
- புலாவுக்கு தேவையான மசாலாவை தயார் செய்ய அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக மிக்சி போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, கல்பாசி மற்றும் மராட்டி மொக்கு ஆகியவற்றை சேர்க்கவும்.
- மணம் வரும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது குழைந்து போகும் வரை வதக்கவும்.
- தக்காளி குழைந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு கிளறிவிடவும்.
- பின்னர் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, ஒரு நிமிடம் நன்கு கிளறவும். காய்கறி பாதி வெந்தவுடன் அதில் ஊறவைத்த அரிசியை அதனுடன் உள்ள நீருடன் சேர்த்து ஊற்றவும்.
- அந்த நீரில் தனியா தூள், கசக்கிய கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- உப்பின் அளவை சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர் மூடி போட்டு மிதமான தீயில் 2 விசில் வரும் வரை சமைக்கவும். பிரஷர் முழுமையாக வெளியேறிய பிறகு மூடியைத் திறக்கவும்.
- ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி சாதத்தை மெதுவாகக் கிளறிவிடவும். சாதத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து, தயிர் வெங்காயத்துடன் சூடாகப் பரிமாறவும்



Click it and Unblock the Notifications
