Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
Karnatka Style Kollu Chutney Recipe in Tamil: பெரும்பாலும் உங்கள் வீட்டில் காலை அல்லது இரவில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? இட்லி, தோசைக்கு மிகவும் எளிதான மற்றும் அதேசமயம் சுவையான சைடிஷ் என்றால் அது சட்னிதான். எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஸ்டைல் கொள்ளு சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு வழக்கமான சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த சட்னி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா கொள்ளு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் கொள்ளு
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 2 காய்ந்த மிளகாய்
- 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/4 டீஸ்பூன் மல்லி விதை
- சிறிதளவு புளி
- 2 பூண்டு பல்
- சிறிது கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதைகள் மற்றும் கொள்ளு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அனைத்துச் பொருட்களையும் மிதமான தீயில் வறுக்கத் தொடங்குங்கள். பருப்பு வகைகள் பழுப்பு நிறமாகும் வரையிலும், கொள்ளு வெடிக்கும் வரையிலும் வறுக்கவும். பருப்பு வகைகள் கருகி விடக்கூடாது.
- அடுத்து, கறிவேப்பிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆறும் வரை காத்திருந்து, பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இறுதியில் 2 பல் பூண்டு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான கர்நாடகா கொள்ளு சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
