Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
Karnataka Style Curd Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே பெஸ்ட் சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே உங்களுக்கு தலைவலி வந்துவிடுகிறதா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை, பெரிய வெங்காயம் மற்றும் தயிர் உள்ளதா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் தயிர் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த தயிர் சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த தயிர் சட்னி இட்லி, தோசை மற்றும் கர்நாடக ஃபேமஸ் அக்கி ரொட்டி போன்றவற்றுக்கு சூப்பர் சைடிஷா இருக்கும். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் பொட்டுக்கடலை
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 5 பச்சை மிளகாய்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 2 பெரிய வெங்காயம்
- ஒரு பெரிய சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 கப் தயிர்
- 2 ஸ்பூன் சர்க்கரை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
- 2 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும் அல்லது மிளகாயை அரைத்தும் சேர்க்கவும். பின்னர் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இதை நன்றாக கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ளவும். இதை தண்ணீர் சேர்க்காமல் நைசான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொண்டு, 5 ஸ்பூன் பொட்டுக்கடலை பொடியைச் சேர்க்கவும்.
- இதை நன்றாகக் கலக்கவும். கட்டிகள் ஏதும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இது வெங்காய தாளிப்பில் கொட்டி நன்றாக கலக்கவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வளவுதான் சுவையான கர்நாடகா பேமஸ் தயிர் சட்னி ரெடி.
- இதை சூடான இட்லி, தோசை அல்லது பூரியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
