Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கர்நாடகா ஸ்டைல் தேங்காய் ரசம்
Karnataka Style Coconut Rasam: ரசம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இதுவரை எத்தனையோ ரசம் நீங்கள் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் கர்நாடகா ஸ்டைல் தேங்காய் ரசம் செய்து சுவைத்துள்ளீர்களா?
இந்த தேங்காய் ரசத்தில் தேங்காய் அரைத்த சேர்க்கப்படும் மற்றும் இந்த ரசம் வழக்கமாக செய்யும் ரசத்தை விட வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இதனால் இதன் சுவையும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தேங்காய் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் தேங்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* கொத்தமல்லி - 1/2 கப்
அரைப்பதற்கு...
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* நற்பதமான துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (மேலே தூவுவதற்கு)
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, அதை குக்கரில்
போட்டு, 2 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில்
போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் குக்கரில் கொத்தமல்லியை சேர்த்து 1/2 கப் நீரை ஊற்றி மீண்டும்
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை மட்டும் வடிகட்டி தனியாக
ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சத்ர ஜாரில் கசகசா, மிளகு, வெங்காயம், வரமிளகாய்,
தேங்காய் சேர்த்து சிறிது நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை வடித்து வைத்துள்ள நீரில் சேர்த்து கலந்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து
குறைந்தது 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு நல்ல மணம் வரும் வரை
வதக்கி, அதை கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்துடன் சேர்த்து, ரசத்தை
இறக்கி மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், கர்நாடகா ஸ்டைல்
தேங்காய் ரசம் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications