Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா இந்த கர்நாடகா ஸ்பெஷல் சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...!
Karnataka Special Thuvaram Paruppu Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொஞ்சம் துவரம் பருப்பு உள்ளதா? அப்ப சூப்பரான கர்நாடகா ஸ்டைல் தொகரி பேலே சட்னி செய்யலாம்.
துவரம் பருப்பை பொதுவாக நாம் சாம்பார் வைத்துதான் சாப்பிடுவோம், துவரம் பருப்பை தாளிக்கக் கூட நாம் பயன்படுத்த மாட்டோம். ஆனால் கர்நாடகாவில் இதை வைத்து சூப்பரான சட்னியே செய்கிறார்கள். இந்த துவரம் பருப்பு சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு கர்நாடகா ஸ்பெஷல் துவரம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்பெஷல் துவரம் பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கப் துவரம் பருப்பு
- 5 வர மிளகாய்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
- ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க தேவையானப் பொருட்கள்:
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 சிவப்பு மிளகாய்
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 சிறிய அளவிலான வெங்காயம்
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, வர மிளகாய் மற்றும் கால் கப் துவரம்பருப்பு சேர்த்து, பருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி விதைகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும்.
- கடைசியில் பெருங்காயத்தைச் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சில நொடிகள் வதக்கி, அடுப்பை அணைக்கவும்.
- ஆறும் வரை காத்திருந்து, வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாடியில் போட்டு, துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு புளி சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றவும்.
- அவ்வளவுதான் சூப்பரான துவரம் பருப்பு சட்னி ரெடி. இது சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
