Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
கர்நாடகா ஸ்பெஷல் காயு கொஜ்ஜு சட்னி ரெசிபி..இந்த சட்னியை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...
Karnataka Special Kayi Gojju Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே பல பெண்களுக்கு தலைவலியே வந்துவிடுகிறது. எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தேங்காயும், ரசப்பொடியும் உள்ளதா?
இதுவரை நீங்கள் ரசப்பொடியை வைத்து ரசம் மட்டும்தான் வைத்திருப்போம். ஆனால் ரசப்பொடியை வைத்தே கர்நாடகாவில் ஒரு சூப்பரான சட்னியை செய்வார்கள். இந்த சட்னியில் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் என அனைத்து சுவையும் இருப்பதால் இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னியை கர்நாடகாவில் காயு கொஜ்ஜு என்று அழைப்பார்கள்.

உங்களுக்கு காயு கொஜ்ஜுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காயு கொஜ்ஜுவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் துருவிய தேங்காய்
- 5 சிவப்பு மிளகாய்
- 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 டேபிள்ஸ் பூன் உளுத்தம்பருப்பு
- 1/2 டேபிள் ஸ்பூன் தனியா
- 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் ரசப்பொடி
- 1 சிறிய எலுமிச்சை அளவு வெல்லம்
- 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 சிவப்பு மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியில் வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றை எடுத்து, 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் பருப்புகள் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் தனியா மற்றும் கடுகு சேர்த்து வதக்கவும், பின்னர் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். தேங்காயை சிறிது நேரம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும். ஆறிய பின் இதை மிக்ஸி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து, தாளிக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் இதில் உப்பு மற்றும் ரசப்பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் சிறிதளவு வெல்லம் மற்றும் புளிக்கரைசல் சேர்க்கவும்.
- இறுதியாக அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். உப்பு சரிபார்த்து இறக்கினால் சூப்பரான காயு கொஜ்ஜு ரெடி.
- இதை நெய் சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடவும் இது அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
