Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
பழைய சாதமும், அரிசி மாவும் இருக்கா? அப்ப இந்த ரொட்டியை செய்யுங்க..
Karnataka Special Akki Roti Recipe In Tamil: இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் பழைய சாதம் மற்றும் அரிசி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டைக் கொண்டும் கர்நாடகாவின் ஸ்பெஷல் ரெசிபியான அக்கி ரொட்டியை செய்யுங்கள். இந்த அக்கி ரொட்டிக்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷனாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த அக்கி ரொட்டி குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு அக்கி ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே அக்கி ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பழைய சாதம் - 1 கப்
* அரிசி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பழைய சாதத்தை கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்,
சீரகம், சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து,
சிறிது சுடுநீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை
அதன் மேல் வைத்து, தட்டையாக ரொட்டி போன்று தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
தட்டி வைத்துள்ள ரொட்டியைப் போட்டு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்
வைத்து, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில்
போட்டு வேக வைத்து எடுத்தால், அக்கி ரொட்டி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
